டில்லி,

பாராளுமன்றத்தில் 2018-19ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் மத்திய நிதி அமைச்சல் பல்வேறு வகையான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதில், இந்தியாவின்  குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கான ஊதியம் உயர்வு குறித்தும் தெரிவித்தார்.

அதனபடி, குடியரசுத்தலைவர் ஊதியம் 5 லட்சம், துணைக் குடியரசுத்தலைவர் 4 லட்சம், ஆளுநர்கள் ஊதியம்  3.5 லட்சம் ஆக உயர்த்தப்படுவதாகவும், இந்த புதிய ஊதியம் வரும் ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படும் என்றும்,  இந்த சம்பள உயர்வு  5 ஆண்டுக்கு ஒரு முறை திருத்தி அமைக்கப்படும் என்றும் கூறினார்.

இதன் காரணமாக அரசாங்கத்தின் மொத்த வருவாய் செலவு 21.57 லட்சம் கோடியாகும் என்றும் குறிப்பிட்டார்.