அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை ஆளும் தார்மீக பொறுப்பை இழந்த நிலையில் பதவி விலக 13 ம் தேதி வரை அவகாசம் கேட்டு தலைமறைவாக உள்ளார். தவிர இரண்டு நாட்களாக யாருடைய கண்ணுக்கும் புலப்படாமல் ஆட்சி செய்து வருவது உலக அரசியலில் இல்லாத விந்தையாக உள்ளது.

அதேவேளையில், அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது கட்டிலில் படுத்து உருண்டு மகிழ்ந்ததுடன் அங்குள்ள நீச்சல் குளத்தை பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றி அருணாச்சலம் படத்தில் வருவது போல் அங்கு காமெடி காட்சிகளை அரங்கேற்றினர்.

அவரது மாளிகையில் செல்போனுக்கு சார்ஜர் போட நினைத்த ஒருவர் தனது மொபைலுக்கு ஏற்றாற்போல் சின்ன பின் சார்ஜர் கிடைக்காததால் ராஜபக்சே-வின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடர்பு கொண்டு வடிவேலு பட பிரபா ஒய்ன்ஸ் காமெடி போல் “இங்கே சின்ன பின் சார்ஜர் ஏதும் இருக்கிறதா” என்று விசாரித்து மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.

அதற்கு எங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி உங்கள் பெயர் முகவரி அனுப்புங்கள் என்ற ஆட்டோமேட்டட் தகவல் பதிலாக வந்தது மேலும் காமெடியாக உள்ளது.

பொருளாதார நெருக்கடியிலும் பொதுமக்கள் அதிபர் மாளிகைக்குள் காமெடியான நிகழ்வுகளை அரங்கேற்ற ராஜபக்சேவோ தலைமறைவாக இருந்து தனது பதவிக்காலத்தை நீடித்து வருகிறார். தவிர அவர் இப்போது இருந்தால் எங்கு இருக்கிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.