திருவனந்தபுரம்
இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வருகிறார்.
இன்று (21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேரளா வருகிறார். அவர் காசர்கோட்டில் பெரியா மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
பிறகு மாலை 6.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொச்சி புறப்பட்டுச் செல்கிறார். அவர் நாளை (புதன்கிழமை) காலை 9.50 மணிக்குத் தென் மண்டல கப்பற்படை தலைமையகத்தில் நடைபெறும் வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார்.
நாளைப் பகல் 11.30 மணிக்கு விக்ராந்த் விமானம் தாங்கி போர்க் கப்பலைப் பார்வையிடும் ராம்நாத் கோவிந்த் ௨௩ஆம் தேதி கொச்சியில் இருந்து காலை 10.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் வருகிறார். அவர் திருவனந்தபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 24ஆம் தேதி காலை 9.50 மணிக்குத் தனி விமானத்தில் டில்லி புறப்பட்டுச் செல்கிறார்.