டில்லி
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்குக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கு முன்பு இருந்த மத்திய அரசுகள் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்க பல முறை முயன்றன; ஆயினும் பல காரணங்களால் இந்த மசோதா இயற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போதைய மத்திய அரசு இந்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு ஆளும் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெறிவித்தன. இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது எனவே இந்த மசோதா தற்போது சட்டமாகி உள்ளது. மத்திய அரசு இது குறித்து அரசிதழில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் தேதியிலிருந்து இந்த சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.