டெல்லி

னாதிபதி திரவுபதி முர்மு வக்பு  வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்

.

மத்திய அரசு வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகம் செய்தபோது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. எனவே அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.

அந்த மசோதா மீது கூட்டுக்குழுவில்  விவாதம் நடத்தப்பட்டு, சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அந்த பரிந்துரைகளுடன் வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

நள்ளிரவு வரை அதன் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினு,அந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது

பின்னர் அந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவை பரிசீலித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நேற்றிரவு அனுமதி அளித்தார். இந்த ஒப்புதலின் மூலம் அந்த மசோதா சட்டமாகியது.