நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன், கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடியுள்ள வினைதா-வுடன் கமிட்டாகியிருக்கிறார்.

இதுவரை சிங்கிளாக இருந்த பிரேம்ஜிக்கு திருமணம் முடிக்க இவரது தந்தை கங்கை அமரன் முடிவெடுத்திருந்தார்.
கடந்த ஆண்டு இவரது தாயின் மறைவுக்குப் பிறகு இதுகுறித்து பேட்டி அளித்திருந்த இசையமைப்பாளரும் திரைத்துறையில் பன்முகத்தன்மை கொண்டவருமான கங்கை அமரன் ஓராண்டுக்குள் பிரேம்ஜி திருமணம் நடைபெறும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பிரேம்ஜி அமரன் பின்னணி பாடகி வினைதா-வுடன் கமிட் ஆனதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Patrikai.com official YouTube Channel