சென்னை:
கபாலி படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை சலுகைகள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேமுதிக கட்சியின் மகளிரணித் தலைவி பிரேமலதா.
கபாலி திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி வெளியானது. படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததோடு, தமிழக அரசு வரிவிலக்கும் கொடுத்துள்ளது. ஆனால் கபாலி திரைப்படத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் வன்முறைகளும் சர்வசாதாரணமாக உள்ளன. சிங்கப்பூர், மலேசியா உட்பட சில நாடுகளில் இந்த படத்தை குழந்தைகள் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கபாலி படம் பற்றி பிரேமலதா தெரிவித்திருப்பதாவது:
“கபாலி படம் நல்லாயிருக்கு… நல்லாயில்லை என்பது வேற விஷயம். என் ஆதங்கம் எல்லாம்… இந்தப் படத்துக்கு மட்டும் ஏன் இத்தனை சலுகைகள் என்பதுதான். ஓவர் நைட்ல எல்லா வெப்சைட்களையும் லாக் பண்றாங்க. படத்துல ஏகப்பட்ட வெட்டுக்குத்து வன்முறைகள் இருந்தும் யூ சர்டிபிகேட் கிடைக்குது… வரிவிலக்கும் கொடுக்கிறாங்க… ஏன்?
எல்லா படங்களுக்குமே இந்த மாதிரி செய்தால், திரையுலகம் நல்லாயிருக்குமே. பக்கத்தில் உள்ள சில மாநிலங்களில் எல்லா படங்களுக்குமே வரிவிலக்கு கொடுக்கறாங்க.
ஆனா கபாலிக்கு மட்டும் ஏகப்பட்ட சலுகைகள் கொடுத்ததற்குக் காரணம், அந்த படத்தை ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனம் செய்ததால்தானா? “ என்ற கேள்வியை பிரேமலதா எழுப்பியுள்ளார்.