நெல்லை:

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி ரெங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் இசைவாணி. நிறைமாத கர்ப்பிணி. இவர் வீட்டில் மின்சார விளக்கை சரி செய்யும் முயற்சித்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக இசைவாணி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே இசைவாணி துடிதுடித்து இறந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.