சூர்

சூர் அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் அதிமுக எம் பி காக பல மணி நேரம்  கர்ப்பிணிப்  பெண்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் கே பி முனுசாமி பல மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார்.    அவர் இன்று ராமன் தொட்டி, சித்தனப்பளி, சின்ன எலசகிரி , பெடரப்பள்ளி வெங்க்டேஷ் நகர் ஆகிய இடங்களில் அம்மா மினி கிளினிக் துவங்க இருந்தார்.

இந்த திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளைத் தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு செய்திருந்தது.  அவ்வகையில் சின்ன எலசகிரியில் அரசுப் பள்ளியில் அம்மா மினி கிளினிக் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  இதையொட்டி பள்ளியில் தோரணங்கள், மாலைகள், அலங்காரப் பொருட்கள், குத்துவிளக்குகள் தயாராக இருந்தன.

காலை முதல் 10 கர்ப்பிணிப் பெண்கள் வரவழைக்கப்பட்டுக் காத்திருக்க வைக்கப்பட்டனர்.  இவர்களுக்கு வழங்கப் பரிசுகளும் தயாராக இருந்தன.  ஆனால் மாலை 3 மணி வரை முனுசாமி வரவில்லை.

மணிக்கணக்கில் அவருக்காகக் காத்திருந்த கர்ப்பிணிப் பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.  இந்த விவகாரம் குறித்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநரைச் செய்தியாளர்கள் தொலைப்பேசியில் அழைத்த போது அவர் தொலைப்பேசி அழைப்பை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.,