காலிங்கபூர்

ர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்ட பெண் கவுன்சிலருக்கு கருச்சிதைவு  ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் 12 ஆம் தேதி அன்று கர்நாடக மாநிலம் மகாலிங்கபூரில்  நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடந்தது.   இங்கு 13 பாஜகவினரும் 10 காங்கிரசினரும் உறுப்பினர்கள் ஆவார்கள்.  பாஜகவைச் சேர்ந்த நகராட்சி உறுப்பினர்களான கோதாவரி பாத், சாந்தினி நாயக் மற்றும் சவிதா ஹூரகாட்லி ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் தலைமை அனுமதிக்கவில்லை.

இம்மூவரும் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்த தகவல் பாஜக நிர்வாகிகளுக்குத் தெரிந்ததால் அவர்கள் அங்கு கூடி மூவரையும் வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளனர்.   சித்து சாவடி தொகுதியின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தங்களை மீறி உள்ளே நுழைந்த சவிதாவைப் பிடித்து இழுத்து தரதரவென படியில் இழுத்துத் தள்ளி உள்ளார்.  அதன் பிறகு காவல் துறையினர் தலையிட்டு சவிதாவை மீட்டுள்ளனர்.

அப்போது சவிதா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.  அவருக்கு நேற்று கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.  இது கர்நாடக மாநிலம் மகாலிங்கபூர் மாவட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.    இதுவரை இந்த சம்பவம் குறித்து பாஜக தலைமை சட்டப்பேரவை உறுப்பினருக்கு எவ்வித கண்டனமும் தெரிவிக்காமல் உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=AX1pROvwmkM]