சென்னை:

சென்னை வில்லிவாக்கத்தில் ரெயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவன் பட்டப்பகலில் வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இது ரெயில்வே தொழிலாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதியவன் கொலை செய்யப்பட்டதற்கு முன் விரோதம் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை ரெயில்வேயில் பல தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ஏஐஓபிசி (all india other Backword class) தொழிற்சங்கத்தின் நிர்வாகியாக புதியவன் இருந்து வருகிறார்.

இவர் சென்னை ஐசிஎப்-ல் உள்ள  ரெயிவே தொழிற்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையின் முன்னாள்  ஊழியர். இவர் ஏற்கனவே ஏஐஓபிசி சங்கத்தின் நிர்வாகியாக இருந்த நடராஜனை கொலை செய்துவிட்டு, அவரது பதவியை பிடித்துள்ளதாக ரெயில்வே ஊழியர்கள் கூறுகிறார்கள்.

இதன் காரணமாகவே, நடராஜனின் ஆதரவாளர்கள் புதியவனை கொலை செய்திருக்க வாய்ப்பிருப்பதாக ரெயில்வே தொழிற்பெட்டி தொழிற்சாலை ஊழியர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

மேலும், ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்திருப்பதாகவும், இதன் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மற்றொரு தகவல் கூறுகிறது.

ஆனால், விசாரணையின் அவரை கொலை செய்தது, அவருடன் எப்போதும் இருந்து வரும் முன்னாள் கார் டிரைவரான பாஸ்கர் என்பதும், முன் விரோதமா காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பாஸ்கருக்குத்தான்  வீட்டின் அனைத்து பகுதிகளிலும் தெரியும், அதன் காரணமாகவே, புதியவன் இன்று காலை 2வது மாடியில் ஓய்வு எடுத்துக்கொண்டி ருந்தபோது, மற்றொருவருடன் சேர்ந்து, இரண்டாவது மாடியில் உள்ள , அவரை சந்திப்பதாக சென்று, சரமாரியாக வெட்டி கொலை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கீழ் தளத்தில் புதியவன்  குடும்பத்தினர் இருந்துள்ள நிலையில் இந்த கொலை அரங்கேறியிருப்பது ரெயில்வே ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஐசிஎப் போலீசார், கொலை செய்யப்பட்ட புதியவனின் உடலை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், புதியவன் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி புதியவனை வீடு புகுந்து மர்ம நபர்களை கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டபகலில் வீடு புகுந்து குடும்பத்தினர் முன்னிலையில் நடந்துள்ள இந்த படுகொலை சம்பவத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். புதியவன் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.