லக்னோ:

த்தரபிரதேச அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ள பிரியங்கா காந்தியால் பாஜக தலைமை அரண்டுபோய் உள்ள நிலையில், முன்னாள் விஎச்பி தலைவரான பிரவிண் தொகாடியா  புதிய அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில்,  பாஜக ஆளும் மாநிங்களில் பாஜகவின் வாக்கு வங்கிகளை கவரும் வகையில் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார்.

இதன் காரணமாக பாஜக தலைமை பீதியடைந்து உள்ளது.

இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத்தின் தலைவராக இருந்தவர் பிரவிண் தொகாடியா. அந்த அமைப்பின் சர்வதேச தலைமை பதவிக்கு ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற தேர்தலில் தனது நம்பிக்கைக்குரியவரான ராகுல் ரெட்டியிடம், பிரவிண் தொகாடியா தோல்வி அடைந்தார்.

அதன்பிறகு விஸ்வ இந்து பரிஷத் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட தொகாடியா, ‘அந்தராஷ்டீரிய இந்து பரிஷத்’ என்ற புதிய இந்துத்துவா அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.

தொகாடியா தற்போது ‘ஹிந்துஸ்தான் நிர்மான் தள்’ என்ற புதிய அரசியல் கட்சியை துவங்கி தேர்தல் கமிஷனிலும் பதிவு செய்துள்ளார். அந்த கட்சியின் தேசிய தலைவர் பொறுப்பில் உள்ள பிரவிண் தொகாடியா நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் ‘ஹிந்துஸ்தான் நிர்மான் தள்’ கட்சி பல்வேறு மாநிலங் களில் போட்டியிட உள்ளது. உத்தர பிரதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள அனைத்து பாராளு மன்ற தொகுதிகளிலும் போட்டியிட இருf;கிறோம். உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியா தொகுதியில் எங்கள் கட்சி வலுவாக உள்ளதால் அந்த தொகுயில் நான் (தொகாடியா) போட்டியிடுவேன், என்றார்.

அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதே தங்கள் கட்சியின் முக்கிய தேர்தல் வாf;குறுதியாக இருக்கும் என்று கூறிய தொகாடியா, பல்வேறு மாநிலங்களில் தனது கட்சி சார்பில் போட்டியிட இருf;கும் 40 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார்.

தொகாடியாவின் இந்த அறிவிப்பு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்துத்துவா ஆதரவு அமைப்பு களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வாக்குள்ள மாநிலங்களாக இருந்த ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் ஆட்சியை இழந்துவிட்டது.

இந்தநிலையில், உத்தரபிதேசம், குஜராத் மாநிலங்களில் உள்ள பாராளுமன்ற தொகுகளையே குறிவைத்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு தற்போது ‘ஹிந்துஸ்தான் நிர்மான் தள்’ கட்சி போட்டியிடப்போவது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொள்ளு பேத்தியும், இந்திரா காந்தியின் பேத்தியுமான பிரியங்கா உத்தரபிரதேச மாநிலத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருப்பதால்,  அச்சத்தில் இருந்து மீள முடியாத பாரதிய ஜனதா கட்சி தற்போது தொகாடியாவின் தொல்லையால் தோல்வி பயத்தில் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.