டில்லி
முன்னாள் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா புதிய கட்சியை வரும் ஜூன் 24 அன்று தொடங்க உள்ளார்.
இந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அன்று இந்துத்வா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் அமைப்புக்கு சர்வதேச தலைவர் தேர்தல் நடந்தது. அதில் அப்போதைய வி இ ப தலைவரான பிரவீன் தொகாடியா தனதுஆதரவாளரான ராகவ் ரெட்டியை களம் இறக்கினார். ஆனால் இமாசலப் பிரதேச முன்னாள் ஆளுநர் கோக்ஜியால் ராகவ் ரெட்டி தோற்கடிக்கப்பட்டார். அதை ஒட்டி வி இ ப வில் இருந்து பிரவீன் தொகாடியா ராஜினாமா செய்தார்.
தற்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பிரவின் தொகாடியா, “ஜூன் மாதம் 24 ஆம் தேதி அன்று நான் ஒரு புதிய கட்சியை தொடங்க உள்ளேன். அந்தக் கட்சியின் மூலம் தற்போதைய மோடி அரசின் அநீதிகளுக்கு ஒரு முடிவு கட்ட எண்ணி உள்ளேன்.
மோடி அரசின் செயல்பாடுகள் பூஜ்யத்துக்கும் கீழே சென்று மைனஸ் 25% ஆக உள்ளது.
மோடி அரசு பிரம்மாண்டமான கனவுகளை விற்பதை விடுத்து உண்மையான மக்கள் சேவையில் ஈடுஅட வேண்டும். ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள் மோடி அரசின் மீது அதிருப்தியுடன் உள்ளனர். இந்துதுவ கொள்கையை பின்பற்றுவோருக்கு மோடி அரசு எதிராக உள்ளது.
அரசு ராமர் கோவில் கட்ட உடனடியாக சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். பசுவதை தடை, காஷ்மீர் மாநிலத்துக்கான விதி எண் 370 நீக்கம், சமாமான சிவில் சட்டம் ஆகியவைகளையும் உடண்டையாக அமுல் படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.