பாட்னா

பிரசாந்த் கிழ்ஹோர் நிதிஅஹ்குமார் தனது  க்டைசி அரசியல் இன்னிங்சில் உள்ளதாக கூறியுள்ளார்.

பீகார் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிடுகிறது. இந்நிலையில் பீகார் தேர்தல் குறித்தும், தேர்தலில் தனது கட்சியின் போட்டி குறித்தும் பிரசாந்த் கிஷோர் தனியார் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கோட்டையாக உள்ள ராகோபூர் தொகுதியில் போட்டியிட தயாரக உள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதா என்ற நிரூபரின் கேள்விக்கு, “கட்சி முடிவு செய்தால், நான் நிச்சயமாக (தேர்தலில்) போட்டியிடுவேன். தேஜஸ்வி யாதவுக்கு எதிராக ரகோபூரில் இருந்து போட்டியிட வேண்டும் என்று கட்சி விரும்பினால், நான் போட்டியிடுவேன்” என்று பதிலளித்தார்.

ஆர்ஜேடி நிறுவனர் லாலு யாதவ், அவரது மனைவியும், முன்னாள் முதலமைச்சருமான ராப்ரி தேவி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை பல முறை தேர்ந்தெடுத்துள்ள தொகுதியாக ராகோபூர் தொகுதி உள்ளது.

தொடர்ந்து நிதிஷ் குமார் முதலமைச்சராக தொடர வாய்ப்பு இல்லை எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். “பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொரோனா கால ஆட்சியால், மக்கள் எரிச்சலடைந்துள்ளனர். நிதிஷ் குமார் தனது கடைசி அரசியல் இன்னிங்ஸில் இருக்கிறார்.

பாஜக ஒருபோதும் நிதிஷ் குமாரை மீண்டும் முதலமைச்சராக விடாது. மேலும் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அடுத்த அரசாங்கத்தை அமைக்காது. இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், நிதிஷ் குமார் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது, எனவே அவர் பீகாரின் முதலமைச்சராக ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பார்” என தெரிவித்துள்ளார்.

மேலும் தனிப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், “நான் ஐ.நா.விலும் பணியாற்றியுள்ளேன். நான் ஒரு அரசியல் ஆலோசகராகப் பணியாற்றினேன். ஆனால் இப்போது நான் ஒரு முழுநேர அரசியல்வாதி. தயவுசெய்து எனது கடந்த காலத் தொழிலைக் கொண்டு என்னை மதிப்பிடாதீர்கள்” என்று பதிலளித்தார்