டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சமூக செயற்பாட்டாளரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிருமான பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதிகளை விமர்சித்து இருந்தார். இதையடுத்து, அவருக்கு எதிராக நீதிமன்றத் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14ம் தேதி அறிவிக்கப்பட்டது. தண்டனை விவரங்கள் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது.
அதனை தொடர்ந்து, பிரசாந்த் பூஷண் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரசாந்த் பூஷண், சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதால், தண்டனை தொடர்பான வாதங்களை ஒத்தி வைக்க கோரப்பட்டிருந்தது. இந் நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த கூடுதல் அறிக்கை மீது வாதங்கள் நடைபெற்றது.
நீதிமன்றத்தை ஒவ்வொருவரும் அவமதித்து வந்தால், அதன் மீது எப்படி நம்பிக்கை வரும் என்று நீதிபதி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, தண்டனை விவரத்தை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.