விஷால், பிரசன்னா நடித்த துப்பறிவாளன் படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் சில மாதங்கள் முன்பு துவங்கியது.

ஷூட்டிங்கில் வீண் செலவு செய்ததாக கூறி விஷால் மற்றும் மிஸ்கின் இடையே வெடித்த பிரச்சனை பெரிதாகி மிஸ்கின் படத்தில் இருந்து விலகினார்.

இதனிடையே மிஸ்கின் NOC கொடுத்துவிட்டதால், மீதி இருக்கும் படத்தினை விஷாலே இயக்கவுள்ளார்.

இந்நிலையில், துப்பறிவாளன் படத்தில் விஷாலுடன் நடித்துள்ள பிரசன்னாவிடம், மிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் எப்படி இருக்கும் என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரசன்னா, ”துரதிர்ஷ்டவசமாக மிஷ்கின் இந்த படத்தில் இல்லை. அதற்காக நான் வருந்துகிறேன். அதே நேரம் விஷால் சிறப்பானதை கொடுப்பார் என நம்புகிறேன். அவரிடம் நிரூபிக்கபட வேண்டியவை நிறையவுள்ளது” என தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]