
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகையாக வலம் வருபவர் ப்ரணீதா சுபாஷ்.
தமிழில் 2017ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ தான் இவர் நடித்த கடைசிப் படமாகும்.
இந்நிலையில், நேற்று (மே 30) தொழிலதிபர் நிதின் ராஜுவைத் திருமணம் செய்துகொண்டார் ப்ரணீதா சுபாஷ். இதில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். கொரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் திருமண வரவேற்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ப்ரணீதா சுபாஷின் திருமணம் காதல் திருமணமாகும். நிதின் ராஜு – ப்ரணீதா சுபாஷ் இருவருமே நீண்ட காலமாகவே உற்ற நண்பர்களாக இருந்துள்ளனர். பின்பு காதலர்களாகி, இருவரது வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
Patrikai.com official YouTube Channel