டில்லி

ந்திய வருமானத் துறை அதிகாரியான பிரமோத் சந்திர மோடி மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1982 ஆம் வருடம் இந்திய வருமானத்துறை அதிகாரிகள் தேர்வில் வெற்றி பெற்ற பிரமோத் சந்திர மோடி வருமான வரித்துறையில் பணி புரிந்து வந்தர்.  இந்த துறையில் பல பதவிகளிலும் பல பணிகளிலும் திறமையாக பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தில் பிரமோத் சந்திர மோடி நிர்வாக உறுப்பினராக இருந்து வந்தார்.   இந்த வாரிய தலைவராக சுஷில் சந்திரா பணி ஆற்றி வந்தார்.  கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவர் தேர்க்தல் ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது காலியாக உ ள்ள மத்திய நேரடி வரிவிதிப்பு வாரிய தலைவர் பதவிக்கு பிரமோத் சந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இந்த வாரியம் ஒரு தலைவரையும் அதிகபட்சமாக 6 உறுப்பினர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.