செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின்  அரையிறுதி போட்டியில்  ரஷ்யாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரிவென்ற பிரக்ஞானந்தா இறுதித்தொடரில் சீன வீரரை எதிர்கொள்கிறார்.

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் செஸ் தொடரின் அரையிறுதிப்போட்டியில் ரஷ்யாவின் அனிஷ் கிரியை வீழ்த்தி, தமிழக சிறுவன் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து, உலகின் 2ம்நிலை வீரர் சீன வீரர் டிங் லிரன் உடன் மோதுகிறார்.

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் ரேபிட் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.  சதுரங்க சாம்பியன் போட்டியானது 9 தொடர்களாக பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நவம்பர் வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மூன்று தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது செஸ்ஸபிள் தொடர் நான்காவது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இத்தொடரின் 2ஆம் நாள் முடிவில், பிரக்ஞானந்தா 5ஆவது இடத்திலும், கார்ல்சன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். மேலும், இந்திய வீரர்கள் பி. ஹரிகிருஷ்ணா 7ஆவது இடத்திலும், விடித் குஜராத்தி 13ஆவது இடத்திலும் உள்ளனர். சீன வீரர் வேய் யி முதல் இடத்தில் உள்ளார்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் தொடரிலும் ஐந்து முறை உலக சாம்பியனும், தற்போதைய நம்பர்1 வீரருமான கார்சலனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தார். அதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற  அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரி, இந்தியாவின் பிரக்ஞானந்தா உடன் மோதினார். இப்போட்டியில், நான்கு ரேபிட் போட்டிகள் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, நடந்த டை – பிரேக்கர் சுற்றில் 1.5 – 0.5 என்ற புள்ளி கணக்கில் அனிஷ் கிரியை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெறறி பெற்றார்.

இதன்மூலம், பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மேலும், அவர் இறுதிப்போட்டியில் சீன வீரரும், உலகின் 2ஆம் நிலை வீரருமான டிங் லிரன் உடன் மோதுகிறார்.

சதுரங்க சாம்பியன் போட்டியானது 9 தொடர்களாக பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நவம்பர் வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மூன்று தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது நடைபெற்று வருவது  செஸ்ஸபிள் தொடர் நான்காவது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.