சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ்வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 16 வயதாகும் பிராக்ஞானந்தா 18 வயதை எட்டியதும் ஐஓசி நிறுவனத்தில் முறைப்படி இடம் பெறுவார். அதற்கான பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த சிறுவனான பிரக்ஞானந்தா உலக அளவில் செஸ் போட்டிகளில் ஆடி ஏராளமான பரிசகளை குவித்து வருகிறார். 7 வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதுடன், தனது 10 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்று, இளவயது சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தற்போது செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில், உலகின் முன்னணி செஸ் வீரர்களை வீழ்த்தி செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடம் பிடித்தார். இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் சீன வீரரிடம் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக நடைபெற் றவிழாவில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா மற்றும் ஐஓசியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைவர் வி.சி. அசோகன் ஆகியோர் கலந்துகொண்டு, பிரக்ஞானந்தாவுக்க முறைப்படி பணி வழங்கும் ஆணை வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது 16 வயதாகும் பிராக்ஞானந்தா 18 வயதை எட்டியதும் ஐஓசி நிறுவனத்தில் முறைப்படி பணியில் சேருவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிராக்ஞானந்தா, ஐஓசி சார்பில் தனக்கு பணி இணைப்புக்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது. ஐஓசியுடன் இருக்கும் பல செஸ் வீரர்களை நான் அறிவேன், அது அவர்களுக்கு எப்படி ஆதரவளிக்கிறது என்பது எனக்கு தெரியும், ஐஓசியில் இணைந்தது பெருமையாக உள்ளது. இது எனது செஸ் வாழ்க்கையில் எனக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்றார்.
இனி அவர் பங்கேற்கும் போட்டிகளுக்கு ஐஓசி ஸ்பான்சர் செய்வதோடு, அலுவலர் அளவிலான பணிக்கு ஊதியம் என ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்: இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தோல்வியடைந்தார் பிரக்ஞஞானந்தா