எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘பாகுபலி’ – ‘பாகுபலி-2’ படங்களுக்கு பிறகு பிரபாஸ் மார்க்கெட் உயர்ந்து விட்டது. அவர் தற்போது நான்கு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

நான்கும், மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படங்கள்.

பூஜாஹெக்டே ஜோடியாக பிரபாஸ் நடித்துள்ள ‘ராதேஷியாம்’ ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது காதல் கதை.

இதிகாசப்படமான ‘ஆதிபுருஷ்’ படத்தில், பிரபாஸ் ராமனாக நடிக்கிறார்.

தேசிய விருது பெற்ற நாக் அஷ்வின் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நெயில் இயக்கும் ‘சலார்’ படத்தில் பிரபாசுக்கு ஆக்‌ஷன் வேடம். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

“அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி ‘சலார்’ வெளிவரும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

– பா. பாரதி

[youtube-feed feed=1]