காமெடி நடிகராக வலம் வந்த பவர் ஸ்டார் சீனிவாசன், ‘பிக்கப் டிராப்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக பவர் ஸ்டார் சீனிவாசனே நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வனிதா விஜயகுமார் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று காலை திடீரென பவர் ஸ்டார் சீனிவாசன் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக பவர் ஸ்டார் சீனிவாசன் மயங்கி விழுந்ததாக படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.