சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களில் இன்று காலையிலேயே மின்தடை ஏற்பட்டது.
கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, செனாய் நகர், அண்ணா நகர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை மின் தடை ஏற்பட்டது.
தவிர மூலக்கடை, மாநவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கோடம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னறிவிப்பின்றி பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதை அடுத்து அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் செயலிழந்தன.
கடந்த வாரம் கோடம்பாக்கம் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பல மணிநேரம் மின் தடை ஏற்பட்ட நிலையில் இந்த பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் பெரிதும் கவலையடைந்துள்ள நிலையில் இன்று மீண்டும் பல மணிநேரம் மின் தடை ஏற்பட்டது பெரிதும் பாதித்துள்ளது.