‘பவுடர்’ என்று தலைப்பிடப்பட்ட புதிய படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. திரில்லர் கலந்த பிளாக் காமெடி படமாக இந்த படம் தயாராகிறது.

இந்த படத்துக்கு ‘தாதா 87’ படத்தின் முலம் அறிமுகம் ஆகி பலரது பாராட்டுக்களையும் பெற்ற RP (ராஜ பாண்டி) ஒளிப்பதிவு செய்கிறார்.

வித்யா பிரதீப் மற்றும் பிரபல பி.ஆர்.ஓ நிகில் முருகன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் மனோபாலா, வையாபுரி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஆகியோருடன் பல அறிமுக நாயக, நாயகியர்களும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசருக்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

[youtube-feed feed=1]