டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியை அடுத்தாண்டு நடத்த முயற்சிக்கப்படும் என்றாலும், அந்த முயற்சி கடும் சவால் நிறைந்தது என்று தெரிவித்துள்ளார் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் தாமஸ் பாக்.
இந்தாண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டி, கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அடுத்தாண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
தாமஸ் பாக் கூறியதாவது, “ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைக்கும் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதென்பது கனவாகும். அந்தக் கனவை நனவாக்குவதுதான் எங்களின் முக்கிய வேலை.
ஒலிம்பிக் போட்டியைத் தள்ளிவைக்கக்கூடாது என்பதில் தொடக்கம் முதலே உறுதியாக இருந்தோம். ஆனால், நீண்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு தள்ளி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஸ்பான்சர்களுடன் பல சமரசங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. போட்டியை ஒத்திவைத்து அடுத்தாண்டு நடத்துவதென்பது சவாலான வேலை.
எனவே, இந்தாண்டிலேயே திட்டமிட்டபடி போட்டியை நடத்த முயற்சிப்போம். நல்ல முடிவை மேற்கொள்ள முயற்சி செய்வோம்” என்றார்.