சென்னை:
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை ஜூலை அல்லது ஆகஸ்டில் நடத்த முடிவு உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.’
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் (செமஸ்டர்) ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்தது. அதுபோல, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாற்றியமைப்படும் தேர்வு கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பி வருவதால், ஒத்தி வைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது.
தற்போது, ஊரடங்கு காரணமாக, மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டதால் புதிய வினாத்தாள் வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம், விரைவில் இணைப்புக் கல்லூரிகளுக்கும் வினாத்தாள் வடிவமைப்பு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், வரும் ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்டு மாதம் தொடக்கத்தில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
[youtube-feed feed=1]