கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.

கொரோனா ஊரடங்கினால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. திரையரங்க வெளியீட்டுக்காகவே ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருந்தது. திடீரென்று ஜகமே தந்திரம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று தகவல் பரவியது.

இது தொடர்பாகப் படக்குழுவினர் யாருமே எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் ஜகமே தந்திரம் வெளியீடு தொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் : திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட ரசிகர்கள் மற்றும் பெரும்பாலான எனது ரசிகர்களைப் போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தனுஷ் தெரிவித்திருந்தார்.

மீண்டும் படத்தை ஓடிடியில் வெளியிடும் தினத்தன்றே தியேட்டர்களிலும் வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில், ‘ஜகமே தந்திரம்’ படத்தை ஓடிடியில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள் விடுக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், ஜகமே தந்திரம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://twitter.com/DhanushCampaign/status/1357944358675259392