சென்னை: அஞ்சல் வாக்குக்கு அனுமதிக்கப்பட்ட உடல் ரீதியான மறறும் வயதான வாக்காளர்களின் தொகுதி பட்டியலை அளிக்க வேண்டும் என திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், திமுகவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலை தர இயலாது என பதில் தெரிவித்து உள்ளது.
80வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், ஊனமுற்றோர்கள் தபால் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தலாம் என தேரதல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை தமிழக சட்டமன்ற தேர்தலிலும் அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு திமுக உள்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 80 வயதுக்கு மேற்பட்டோர் உள்பட தபால் வாக்களிக்கும் வாக்காளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. மிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், 80 வயதை கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பற்றிய தரவுகள் தனியாக திரட்டப்படுகிறது. எல்லோருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அரசியலமைப்பு விதியின் கீழ் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தபால் ஓட்டு போடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பேரில் படிவங்கள் வழங்கப்படும். சிலர் நேரில் சென்று கூட வாக்களிக்க விரும்பலாம். தேவைப்பட்டால் தபால் ஓட்டு படிவங்களை சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்த நிலையில், தபால் வாக்களிக்கும் முதியோர்களின் பெயர் விவரபட்டியலை முன்கூட்டியே வெளியிடுவது அவர்களது தனிப்பட்ட உரிமைக்கு மாறானது. அதனால், வாககாளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு வழங்க இயலாது என கூறப்பட்டுள்ளது.