பிரதமர் மோடி வந்து சென்ற பின் கேதார்நாத் கோயிலுக்கு 7 லட்சம் பக்தர்கள் வருகை

Must read

புதுடெல்லி:

பிரதமர் வந்து சென்றபிறகு, கடந்த 45 நாட்களில் கேதார்நாத் கோயிலுக்கு 7 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர்.


கடந்த 2013-ம் ஆண்டு இமயமலையை ஒட்டி அமைந்துள்ள கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இதன்பின்னர், கடந்த 2018-ம் ஆண்டு 6 மாதங்களில் 7 லட்சம் பக்தர்கள் கேதார்நாத்துக்கு யாத்திரை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.

அதன்பிறகு, கடந்த 45 நாட்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் கேதார்நாத் யாத்திரை மேற்கொண்டனர். இந்த பெருமை பிரதமர் மோடியையே சாரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்ரி கேதார்நாத் கோயில் கமிட்டி தலைமை நிர்வாக அதிகாரி பிடி.சிங் கூறும்போது, அக்டோபர் மாதத்துக்குள் கேதார்நாத் பாதயாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

கேதார்நாத் பிரதமரின் இதயத்தில் இடம் பிடித்துவிட்டது. அதனால்தான் அங்கு நடக்கும் பணிகளை நேரிடையாக கண்காணிக்கிறார்.

பிரதமர் வந்துசென்றபிறகு, தியான குகைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று கார்வல் மண்டல் விகாஸ் நிகம் பொதுமேலாளர் ராணா தெரிவித்துள்ளார்.

 

 

More articles

Latest article