கொரோனா முடக்கத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில், உள்நாட்டுப் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை, மேலும் பாதுகாப்பு குறைவானதாய் மாறியுள்ளது.
ஆனால், இதுதொடர்பான உண்மை நிலை, பல மீடியாக்களில் வெளியாகவில்லை என்பதுதான் கசப்பான நிதர்சனம். தங்களின் சொந்த மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள், சகலவித மரியாதைகளோடு திருப்பி அழைக்கப்படுகிறார்கள் என்றுதான் சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால், உண்மை நிலை வேறாக உள்ளதாம். ஏற்கனவே, குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வந்த பல வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு, தற்போதைய நிலையில் அந்த ஊதியம்கூட நிரந்தரமானதாக நிர்ணயிக்கப்படவில்லையாம்.
மேலும், அத்தகையப் பணிகளுக்குக்கூட, ஊர் திரும்பிய பணியாளர்களிலிருந்து கால்வாசி பேர்களே அழைக்கப்படுகிறார்களாம்! புலம்பெயர் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, மொத்த எண்ணிக்கையில் 20%க்கும் குறைவானவர்களே ஊதியப் பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
எனவே, கொரோனாவுக்குப் பிந்தைய காலக்கட்டமானது, புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது என்பதே உண்மை.