டெல்லி:
பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் நாட்டில் தற்போது ரூ. 11.73 லட்சம் கோடி பணம் மட்டுமே புழக்கத்தில் இருக்கிறது என்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25 சதவீதத்திற்கு மேல் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தகவல்களை அளித்து பேசுகையில், ‘‘கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி ரூ.16.41 லட்சம் ரூபாய் புழக்கத்தில் இருந்தது. கடந்த மார்ச் 3ம் தேதி வரை ரூ.11.73 லட்சம் கோடி மட்டுமே புழக்கத்தில் விடப்பட்டுளது ’’ என்று தெரிவித்தார்.
‘‘கடந்த 2014ம் ஆண்டு மார்ச் முதல் 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பணம் சீரான முறையில் பணம் புழக்கத்தில் விடுவது அதிகரிக்கப்பட்டு வந்தது. குறிப்பிட்ட பணத்தின் மதிப்பு குறைக்கப்பட்டதால் புழக்கத்தில் விடப்பட்டுள்ள பணத்தில் அளவு குறை க்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை ரூ. 12.82 லட்சம் கோடியும், 2015ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை ரூ. 14.28 லட்சம் கோடியும், 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை ரூ.16.41 லட்சம் கோடி அளவிலான பணம் புழக்கத்தில் இருந்தது’’ என்று மெக்வால் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது புழக்கத்தில் இருந்த 86 சதவீத பணமான ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். பணமதிப்பிழப்புக்கு பிறகு புதிய ரூ. 500, ரூ.2,000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம்த்தில் 1.9 பில்லியன் 5 ரூபாய் நாணயங்களும், 1.03 பில்லியன் 10 ரூபாய் நாணயங்களும் சந்தையில் உள்ளது. அதேபோல் 2.6 பில்லியன் 10 ரூபாய் நோட்டுக்களும், 3.6 பில்லியன் 20 ரூபாய் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளது’’ என்று தெரிவித்தார்.
ரூ.500, ரூ.2,000 நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்ட செலவு தொடர்பான கேள்விக்கு நிதியமைச்சர் அருண்ஜேட்லி பதில் கூறுகையில்,‘‘ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க தேவையான நேரடி மற்றும் மறைமுக கச்சா பொருட்கள், கூலி ஆகியவை ஆண்டுதோறும் மாறிக் கொண்டே இருக்கிறது. இயந்திரங்களின் வகை, வயது மற்றும் தொழிலாளர்களின் திறன் போன்ற வேறுபா டுகளால் அச்சடிப்பு செலவுகள் ஒவ்வொரு நோட்டுகளுக்கும் வேறுபடுகிறது.
குறிப்பாக ஒரு 500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ. 2.87 முதல் ரூ.3.09 வரை செலவாகிறது. ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.3.54 முதல் ரூ. 3.77 வரை செலவாகிறது. பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஏற்பட்ட செலவே புதிய 2,000 ரூபாய் நோட்டு அ ச்சடிக்கவும் செலவாகிறது’’ என்றார்.
நாட்டில் 4 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சகங்கள் உள்ளது. இதில் 2 எஸ்பிஎம்சிஐஎல் வசமும், பாரதிய ரிசர்வ் வங்கியின் நோட்டு முத்ரன் நிறுவனம் வசம் 2 அச்சகங்களும் உள்ளது.