https://www.instagram.com/p/B-re9euh226/
கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர் .
சூழ்நிலை இப்படி இருக்க அத்யாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் தங்கள் முகத்தை மாஸ்க் போட்டு மூடி கொண்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் மாஸ்க் தட்டுப்பாடு காரணமாக கடைகளில் கிடைப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் தாடி பாலாஜி நித்யா மகள் போஷிகா தற்போது நிலவும் கொரோனா பிரச்சனையை சமாளிக்க வீட்டிலேயே மாஸ்க் செய்வது எப்படி என வீடியோ வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது மட்டுமின்றி கொரோனாவிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி என அட்வைஸ் கூறும் விதமாக வீடியோவில் பேசியுள்ளார் அவர்.