லிஸ்பன்

போர்ச்சுகல் பிரதமர் ஆண்டானியோ காஷ்டா ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக ராஜினாமா செய்துள்ளார்.

போர்ச்சுகல் நாடு தெற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது போர்ச்சுகல் நாட்டின் பிரதமராக அண்டனியோ காஷ்டா செயல்பட்டு வந்தார். அந்நாட்டில் உள்ள லித்தியம் சுரங்கங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பிரதமர் அண்டனியோ காஷ்டா, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முக்கிய அமைச்சர்கள்  உள்பட பலரின் வீடுகளில் அந்நாட்டு ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்த வழக்கில் பிரதமர் அண்டனியோவின் நெருங்கிய நபர்கள் 2 பேரை ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

விவகாரம் பூதாகாரமான நிலையில் ஊழல் குற்றச்சாட்டிற்குள் உள்ளான பிரதமர் அண்டனியோ பதவி விலகவேண்டுமென எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வந்தன.  எனவே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரதமர் அண்டனியோ தனது பதவியை  நேற்று ராஜினாமா செய்தார்.

போர்ச்சுகல் அதிபரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்த பின் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அண்டனியோ, இந்த சூழ்நிலையில் நான் எனது ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் அளித்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.