சென்னை: அந்தமானின் தலைநகர் போர்ட் பிளேயர். இனி ஸ்ரீ விஜயபுரம் என பெயர் அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘காலனித்துவ முத்திரைகளிலிருந்து தேசத்தை விடுவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேயரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்து உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த பகுதியானது முன்காலத்தில்,  தமிழ்நாட்டை ஆண்ட சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின்  பெயர்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தலைநகரான போர்ட் பிளேயர், ஸ்ரீ விஜய புரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது,

நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்படு வதாக உள்துறை அமைச்சம் அறிவித்து உள்ளது.  நமது வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்கி வரும் ஸ்ரீவிஜயபுரம் என்றும்  நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து  கூறியுள்ள  உள்துறை அமைச்சர் அமித்ஷா,  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜய புரம் என மாற்றுவதாக  அறிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக, “காலனித்துவ முத்திரைகளில் இருந்து தேசத்தை விடுவிக்க” மறுபெயரிடப்பட்டது. “தேசத்தை காலனித்துவ முத்திரைகளிலிருந்து விடுவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு” நனவாக்கப்பட்டது.  காலனித்துவ பாரம்பரியத்தை அகற்றும் பிரதமரின் பார்வையை நனவாக்கும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமித் ஷா கூறுகிறார்.

கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிஷ் காலனித்துவ கடற்படை அதிகாரியின் நினைவாக போர்ட் பிளேயர் பெயரிடப்பட்டது . கிழக்கிந்திய கம்பெனியின் பிரிட்டிஷ் காலனித்துவ கடற்படை அதிகாரியான கேப்டன் ஆர்க்கிபால்ட் பிளேயரின் நினைவாக போர்ட் பிளேர் பெயரிடப்பட்டது.

கடந்த 2018ல் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் 3 தீவுகளுக்கு பிரதமர் மோடி பெயர் மாற்றம் செய்தார்.  அதைத்தொடர்ந்து தற்போது அம்மாநில தலைநகரின் பெயரும் ஸ்ரீவிஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது சுதந்திரப் போராட்டத்திலும் வரலாற்றிலும் ஸ்ரீ விஜய புரம் இணையற்ற இடத்தைப் பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார். இந்தப் பெயர் சுதந்திரப் போராட்டத்தில் பெற்ற வெற்றியின் அடையாளம் என்றும்.  “முந்தைய பெயர் காலனித்துவ மரபைக் கொண்டிருந்தாலும், ஸ்ரீ விஜய புரம் நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.