சென்னை:

மாரடைப்பால் மரணமடைந்த கே.பி.பிலிம்ஸ் பாலு மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பட அதிபர் பாலு, கடந்த ஒன்றாம் தேதி நள்ளிரவில் மாரடைப்பால் காலமானார்.

இவரது மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள். சரத்குமார். ராதிகா, மனோபாலா உள்ளிட்டபலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாலுவின் ஆத்மா சண்டிய அடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ராதிகா வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், பாலு சீக்கிரமாகவே சென்று விட்டார் என வேதனையுடன் கூறியுள்ளார்.