ராஞ்சி: புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், எளிய மக்களின் நண்பரும், பேராசிரியருமான ஜீன் ட்ரெஸே, ஜார்க்கண்ட் மாநில காவல்துறையால் சிறைவைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தினார்கள் என்பதுதான் இவர் மற்றும் இவரின் நண்பர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.
பெல்ஜியம் நாட்டில் பிறந்த இவர், இந்தியக் குடியுரிமைப் பெற்று, இங்கேயே எளிய மக்களின் மத்தியில் வாழ்ந்து வருபவர்.
புகழ்பெற்ற இந்தியப் பொருளாதார நிபுணர் அமிர்தியா சென்னுடன் இணைந்து ஒரு பிரபலமான புத்தகத்தை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘உணவுக்கான உரிமை’ என்பதே இவரின் முக்கிய நோக்கம். “இவரைக் கைது செய்ததைவிட மிகப்பெரிய கேவலம் எதுவும் கிடையாது” என்று சமூக செயல்பாட்டாளரும் அரசியல்வாதியுமான யோகேந்திர யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
– மதுரை மாயாண்டி