வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

கொரோனா ஊரடங்கால் ஷூட்டிங் தடைப்பட்டிருந்தது . தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, மும்முரமாக பணிகளைத் தொடங்கிவிட்டனர்.

சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பிரபல இயக்குநரான மகிழ் திருமேணி நடிக்கவுள்ளாராம். மேலும் இவர் படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.