ஜெனிவா

லக நாடுகளுக்கிடையே கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத் தாழ்வு நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலையுடன் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் உள்ள இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ள்ட்ட பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.     உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆகி வரும் நிலையில் அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி இறக்குமதி தொடங்கி உள்ளது.

கடந்த 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  இதற்கு பிறகு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அடனாம், “கொரோனா தடுப்பு மருந்துகளில் ஏழை நாடுகளில் உள்ள முதியோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு செல்ல வேண்டியதற்கு பதில் பணக்கார நாடுகளில் உள்ள ஆரோக்யமான இளைஞர்களுக்கு செலுத்தப்ப்டுகின்|றன.  சம அளவில் ஒவ்வொரு நாட்டுக்கும் கொரொனா தடுப்பு மருந்துகளை விநியோகம் செய்ய மருந்து உற்பத்தி நிறுவனங்களை கேட்டுக் கொள்கி|றேன்.” என தெரிவித்துள்ளார்.