
காதல் ரோஜாவே’ திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை பூஜா குமார்
இதன் பிறகு சில ஆங்கிலப் படங்களிலும், இந்தி படத்திலும் நடித்தவர். 2013-ம் ஆண்டு கமல்ஹாசனுடன் மீண்டும் தமிழில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
இவருக்குத் திருமணமான செய்தி ரகசியமாகவே காக்கப்பட்டு வந்தது. ஜாய் என்கிற திருமண ஏற்பாடுகளை செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் ஜோஷியை திருமணம் செய்துள்ளார் .
தற்போது அவரது கணவர் விஷால் ஜோஷி தங்களுக்குக் குழந்தை பிறந்தது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .
“ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேர் தான் இருந்தோம். இப்போதும் மூன்று பேர். எங்கள் குட்டி மகள் நாவ்யா ஜோஷியை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் நானும் பூஜாவும் உற்சாகமடைகிறோம். எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கு, குட்டி நாவ்யாவை இந்த உலகத்துக்கு அழைத்து வந்ததற்கு நன்றி பூஜா. எனது இந்த பிறந்தநாளை என் வாழ்நாளின் மிகச் சிறந்த பிறந்தநாளாக மாற்றிவிட்டாய். உங்கள் இருவரையும் அவ்வளவு நேசிக்கிறேன்” என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CJdlV2aJCio/
[youtube-feed feed=1]