ஆக்ரா :
ஆக்ராவில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில், மிருகக்காட்சி சாலையில் பூட்டப்பட்ட விலங்குகளைப் போல மக்கள் மனிதபமற்ற முறையில் நடத்தப் படுகிறார்கள்.
உணவு மற்றும் நீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அந்த மையத்தின் வெளியே வைக்கப்பட்டு இருக்க, தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் நபர்கள், உள்ளிருந்து இரும்பு கேட்-டின் சிறு துவாரங்கள் வழியே உள்ளிருந்து எடுத்துச் செல்கின்றனர்.
இந்த வீடியோ இப்பொழுது செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை 1793 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், ஆக்ராவில் மட்டும் 241 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது.
ஆக்ராவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை, காங்கிரஸ் பொது செயலாளர் ப்ரியங்கா காந்தியும் வன்மையாக கண்டித்துள்ளார்.