நடிகை அஞ்சலி மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்கும் ‘பூச்சாண்டி’ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் கையில் ரோஸுடன் அஞ்சலிக்கு ப்ரொபோஸ் செய்கிறார் யோகிபாபு. பேய்கள் முன்னேற்ற கழகம் என நுழைவு வாயில் உள்ளது.
கேஎஸ் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கி வருகிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளார். அர்வி – மருதநாயகம் இணைந்து ஒளிப்பதிவு செய்கின்றனர். சுரேஷ் எடிட்டிங் செய்கிறார்.
ஏற்கனவே நயன்தாரா உள்ளிட்ட முக்கிய நடிகைகளுடன் நடித்த யோகி பாபு தற்போது அஞ்சலியுடன் முதல் முறையாக இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Makkale, Peigal Munnetra Kazhagam is open for admissions😁
T&C apply.Here is the First Look of #POOCHANDI ☠️ @SoldiersFactory @yoursanjali @directorkj @iYogiBabu @sinish_s @Arunrajakamaraj @twitavvi @dopmaruthu @Composer_Vishal @editorsuresh @SaktheeArtDir @silvastunt pic.twitter.com/hlHrdVwyf9
— Yogi Babu (@iYogiBabu) November 9, 2020