இயக்குநர் மணிரத்னம் தான் இயக்கி வரும், பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முந்தைய கட்ட படப்பிடிப்பு மார்ச்சில் முடிவடைந்தது. மே மாதம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வட மாநிலங்களில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்தார். இப்போது அங்கு கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது.

அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு பொன்னியின் செல்வன் முதல்பாகம் திரைக்கு வருவதாக நடிகர் கார்த்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

[youtube-feed feed=1]