பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் ஆனது.

தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாயைக் கடந்து வசூலில் சாதனை படைத்திருக்கிறது.

தவிர, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தென் கொரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட இடங்களில் இந்த சோழர் வரலாற்றுப் படம் நல்ல வசூலை ஏற்படுத்தியது.

தமிழ் தவிர ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான போதும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நினைத்த வசூல் வரவில்லை.

21 ம் தேதி முதல் தீபாவளி ரிலீஸ் படங்கள் வெளியாக உள்ள நிலையில் நேற்று வரை இந்தப் படம் 450 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்தாலும் சர்க்கார், பிரின்ஸ் ஆகிய படங்களின் போட்டியை சமாளித்து 500 கோடி வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.