சென்னை:

கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் மீண்டும் இடம் பெற்றதை வரவேற்கிறேன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் உணர்வுடனும், பண்பாட்டுடனும் இரண்டறக் கலந்திருக்கும் பொங்கல் திருநாள் மீண்டும் கட்டாய விடுமுறை பட்டியலில் இடம்பெறும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

பொங்கல் கொண்டாட தமிழகம் தயாராக இருந்த சமயத்தில் குழப்பத்தை உருவாக்கும் வகையில் மத்திய அரசின் அறிவிப்பு ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 14 நாட்கள் கட்டாய விடுமுறை என்ற பட்டியல் உள்ளது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிக முக்கியமானது. அது மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தினம் இது. மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்புக் குழு பொங்கல் தினத்தை கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கவே பரிந்துரை செய்திருக்கணும்.

உள் நாக்கத்துடன் பொங்கலை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கி அந்த குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தால், அதை மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை மதித்து அந்த பரிந்துரையை ரத்து செய்திருக்க வேண்டும். பொங்கல் கட்டாய விடுமுறை பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவித்திருக்க வேண்டும்.
இதை செய்யாமல் அந்த குழுவின் பரிந்துரையை அப்படியே மத்திய அரசு ஏற்றுக் கொண்டது தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைப்பதற்கு சமமானதாகும். அதனால் தான் திமுக சார்பில் அறிக்கைவிட்டு, சென்னையில் 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கும் என் அறிவிக்கப்பட்டது.
அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்தில் கிளர்ந்தெழுத்த இந்த எதிர்ப்பை தொடர்ந்து பொங்கலை கட்டாய விடுமுறை பட்டியலில் மத்திய அரசு மீண்டும் சேர்த்திருப்பது திமுக போராட்ட அறிவிப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்புக்குறியது.