‘சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 3000 ரொக்கம் வாங்க இன்று கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை வாங்காதவர்கள் நாளையும் வாங்கிக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் நாளையும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முழுமையாக முடிவடையாத நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு மக்கள் ஆனந்தமாக பொங்கலை கொண்டாட தமிழ்நாடு அரசு, அரிசி சர்க்கரையுடன் ரூ.3000 ரொக்க பணமும் வழங்கி வருகிறது.

கடந்தசில ஆண்டுகளாக, நிதி நிலை காரணமாக ரொக்கப்பணம் வழங்காமல் பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டும் இன்னும் 3 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் தேர்தல் வர இருப்பதால், மக்களை கவரும் வகையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக 3ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் வேட்டி, சேலை, அரிசி, சக்கரை, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்படி  ஜனவரி 8ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இன்றோடு ஜனவரி 13ஆம் தேதியோடு  நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்னும் பலர் வாங்காத நிலையில், நாளை வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடப்பாண்டு மாநிலம் முழுவதும்,  மொத்தமாக உள்ளசு 2 கோடியே 22 லட்சத்து 91ஆயிரத்து 710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை ( 12.1.2026 அன்று  மாலை வரை)  24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 2,04,10,899 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ. 6123.26 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சுமார் 15லட்சம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காமல் உள்ளனர். சிலர் வெளியூர்களில் பணிபுரிந்து வருகிறார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாட ஜனவரி 14 அல்லது 15 ஆம் தேதி தான் சொந்த ஊருக்கு வருவார்கள். எனவே பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் காலம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கிடும் வகையில் நாளை வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]