சென்னை: பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பு  ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்- செய்யப்படும் என கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்கள்,  பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில்,  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம். கடந்த பொங்கல் (2024) பரிசு தொகுப்பாகத் தமிழக அரசு சார்பில், குடும்ப அட்டைத் தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கம் ஆகியவை இடம் பெற்றிருந்தது.  அதன்படி, இந்த ஆண்டும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

இந்தர நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த ஆண்டு,  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  விரைவில் அறிவிப்பார் என்று கூறியதுடன்,  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.

இவை முடிந்ததும்,  பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பரிசு தொகுப்பு வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.