சென்னை:

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.  தமிழக போக்குவரத்துத்துறை சார்பில்,  சென்னை யிலிருந்து 4,950 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 16ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுஉள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், சென்னை மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் பணி நிமித்தமாக தங்கியுள்ளவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதைத்தொடர்ந்து பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்குச் சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை தினமும் இயங்கி வரும்  2,225 பேருந்துகளுடன், 4950 சிறப்பு பேருந்துகளும்  சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும்.  மொத்தம் நாள் ஒன்றுக்கு 7,175 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

பிற ஊர்களிலிருந்து 9,995 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்றும், வரும்  16ஆம் தேதி முதல் 19ம் தேதி பிற ஊர்களிலிருந்து வரை சென்னைக்கு 4500 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் பல்வேறு ஊர்களுக்கு 9,370 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம்

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, விழுப்புரம், விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி

மாதவரம் புதிய பேருந்து நிலையம்

ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்து பேருந்துள்

கே.கே.நகர் பேருந்து நிலையம்

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் சானடோரியம்

திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்

திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

பூந்தமல்லி பேருந்து நிலையம்

வேலூர், ஓசூர் செல்லும் பேருந்துகள்

முன்பதிவு விவரம் மற்றும் தொடர்புக்கு

சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு – 17 முன்பதிவு மையங்களுடன் ஜனவரி 9ம் தேதி தொடக்கம்

பேருந்து இயக்கம் குறித்து அறிய : 9445014450, 9445014436