டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று (14–ந்தேதி) நடைபெற உள்ளது. இநத் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மேலும் பல அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.
நாடு முழுவதும் தை 1ந்தேதியான நாளை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் விழாவை அரசு மற்றும் தனியார் அலுவலகள், பள்ளி, கல்லூரிகளில் முன்னதாகவே கொண்டாடி மகிழ்கின்றனர். அறுவடை திருநாளான பொங்கலை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். இந்த பொங்கல் பண்டிகைக்கு மத்தியஅமைச்சர்கள் உள்பட பலரை அழைப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு இன்று நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி உள்படமத்திய அமைச்ச்ரகள், பாஜக தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், இந்த விழாவில் பங்கேற்பதற்காக நீதிபதிகள், பல உயர் அதிகாரிகள், பல்வேறு துறை வல்லுனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரதுஅழைப்பை ஏற்று, பிரதமர் மோடி பொங்கல் விழாவில் கலந்துகொள்கிறார்.
இன்று (14–ந்தேதி) தனது இல்லத்தில் எல்.முருகன் பொங்கல் கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரது விடு கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும்,நடன அமைப்பாளர் கலா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். மேலும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், குஷ்பு, சரத்குமார், உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.
கடந்த ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி, திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றியதுடன், இந்தஆண்டும் பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை துண்டுஅணிந்து பங்கேற்கிறார்.
[youtube-feed feed=1]