சென்னை: கூட்டுறவு விற்பனை மையங்கள் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனை செய்யப்படும் என என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண பொங்கல் தொகுப்பு ரூ.199-க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499, பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999 க்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இநத பொங்கல் தொகுப்பானது, நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை, பிரதம கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் விற்பனை செய்யப்படு கிறது. சுயசேவை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை நிலையங்களில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு விற்பனை நிலையங்களில் மளிகைத் தொகுப்புகள் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் நா.சுப்பையன் வெளியிட்டுள்ளாா். அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொது மக்களுக்கு ‘கூட்டுறவு பொங்கல்’ என்ற பெயரில் மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவைப் பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை நிலையங்கள் மூலமாக பொங்கல் தொகுப்பு விற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் தொகுப்பில்,
பச்சரிசி, பாகு வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசிப் பருப்பு, உலா் திராட்சை ஆகியன கொண்ட சிறிய பை ரூ.199-க்கும்,
மஞ்சள் தூள், சா்க்கரை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, நீட்டு மிளகாய், தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், செக்கு கடலை எண்ணெய், கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம் உள்ளிட்ட 20 பொருள்கள் ரூ.499-க்கும் ,
ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட பொருள்களுடன் வரகு, சாமை, தினை, ரவை உள்ளிட்ட பொருள்களைச் சோ்த்து 35 பொருள்கள் ரூ.999-க்கும் விற்பனைக்குக் கிடைக்கும்.
இந்தத் தொகுப்புடன் மட்டும் அரை கிலோ நாட்டுச் சா்க்கரை இலவசமாக வழங்கப்படும்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.