புதுச்சேரி

புத்தாண்டை முன்னிட்டு ஒரு நாள் கடற்கரைச் சாலை மூடப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் கொண்டாட்டங்கள்,  குடிபோதையில் பைக் பந்தயங்கள் ஆகியவை ஒவ்வொரு வருடமும் நிகழ்ந்து வருகின்றன.   இதனால் பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

இதையொட்டி புதுச்சேரி காவல்துறை வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி காலை 7.30 வரை கடற்கரைச் சாலை மூடப்படும் என அறிவித்துள்ளது.    மேலும் வாலிபர்கள் எந்த ஒரு சாலையில் வாகனப் பந்தயங்கள்,  குடி போதையில் வாகனங்கள் ஓட்டுதல் ஆகியவற்றில் ஈடு பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.